Apr 21, 2010
போர்க்களச் சூழல்...
நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..
மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..
சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..
மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..
ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
போர்க்களச் சூழலும்..புரிதலின் முதலெழுத்தும்..காயப்படுத்தி மௌனிக்கின்றன..மிக ஆழமான பதிவு..
( இக்கட்டான சூழலிலிருந்து மிகவிரைவாகவே விடுபட கடவுளை பிரார்த்திக்கிறேன்..)
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !