இந்தப் பதிவை வாசிக்கும் எம் இனிய தோழரே! தோழியே! தங்கள் வருகைக்கு நன்றி! மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்களேன்!

Nov 1, 2009

தேன்கூடு

ந்த வாரம் மற்றுமொரு இணையதளத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன். இது தமிழில் இயங்கும் தளம் (புதுவை.காம்). கணிப்பொறி சம்பந்தமான பதிவுகள் நிறைய இடம் பெறுகின்றன.

விண்டோஸ் மற்றும் லினக்ஸ்-ல் நமக்கு தெரியாத சின்ன சின்ன விஷயங்களை அழகாக விளக்குகிறார்கள்..... நீங்களும் ஒரு முறை விசிட் செய்து பாருங்கள். கூகுள் ரீடரிலும் போட்டு வச்சுக்கோங்க ரொம்ப யூஸ்புள்ளா இருக்கும்


மிழில் குரான், பைபிள் மற்றும் கீதை !!!

குரான் வேண்டுமா? மென்புத்தகமாக இந்த தளத்தில் இருந்து pdf வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள் ! மேலும் யூ-ட்யூப் தளத்தில் அதன் ஒரு பகுதியானது ஒலி-ஒளி வடிவில் கிடைக்கப் பெறுகிறது. பின்குரல் வளம் மிக அருமை, நீங்களும் கேட்டுப் பாருங்கள் !

பைபிளை ஆன்லைனில் தமிழில் படிக்க


கீதையை தமிழில் படிக்க மற்றும் தரவிறக்கம் செய்ய. என்னை பொறுத்தவரை கீதையின் சரியான் விளக்கம் ஓரளவுக்கு Bagavad Gita As It Is-ல் இருகின்றது.



லேப்டாப் யூஸ் பண்றவங்களுக்கு ஒரு சின்ன குறிப்பு
நீங்க உங்க லேப்டாப்பை UPS இருக்கும் இடத்தில் யூஸ் பண்ணும் போது, பேட்டரியை கழட்டி விட்டு நேரடியா AC suppy-யில் இணைத்து பயன் படுத்தவும். இதனால் உங்கள் பேட்டரி லைஃப் 2/3 வருடங்கள் வரை நன்றாக இருக்கும். நானும் இப்ப இப்படி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். வீட்டில் UPS supply இல்லையென்றால் சின்னதாக ஒரு UPS (approx Rs.2000) வாங்கி வைத்துக் கொள்ளவும். பேட்டரி மற்றும் அடாப்டர் தனித்தனியே ரூ.5000 முதல் ரூ.6000 வரை ஆகின்றது.


போன வாரம் காயகல்ப் பயிற்சிக்கு போயிருந்தேன். பயிற்சியின் முடிவில், எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்தார்கள். எனக்கோ காலையில எதுவும் சாப்பிடலங்கறதுனால நல்லா பசி.



 நானும் பிஸ்கட்டை வாங்கி நல்லா நறுக்கு நறுக்குன்னு தின்னுட்டேன், ஆனா மத்த பயபுள்ளைக எவனும் சாப்பிடாமா மாஸ்டர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தாங்க. திடீர்ன்னு மாஸ்டர்

பிஸ்கட்டை தூக்கி சாப்பிடும் போது செய்ய வேண்டிய பயிற்சியை செய்ய என் கையில் மட்டும் பிஸ்கட் மிஸ்ஸிங். நீயும் தான் இருக்கியேங்கற மாதிரி மாஸ்டர் என்னைய பார்த்து ஒரு லுக்கு விட, ஆள் எஸ்கேப்.............

வாழ்க வளமுடன் !

2 comments:

Ramesh Ramasamy said...

to read 'Bible in tamil' site is best to view in Internet Explorer.


In Firefox, fonts are not supporting by default. May be I need to use the font provided by them whn go for Firefox...

Rajthilak said...

Yes, you have to install the font provided by them

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன !