Dec 28, 2009
Dec 26, 2009
Dec 25, 2009
கூகுள் Translate
உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? கவலையை விடுங்கள்....
கூகுளின் புதிய Google Translate யூஸ் பண்ணுங்க.
ஆங்கிலத்தில் டைப் பண்ணுங்க, வார்த்தைகள் ஹிந்தியில் தானாகவே கொட்டும். அதை படிக்க “Show Romanization”-ஐ விரிக்கவும்.
Nov 9, 2009
தேவதைகள் அழுவதில்லை..
பகலை விட விளக்குகளின் வெளிச்சத்தில் தூத்துக்குடியின் இரவுகள் ரம்மியமாய் இருப்பதாய் அன்றும் தோன்றியது. வேடிக்கை பார்த்துக்கொண்டும், கதைத்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தோம் நானும் தோழியும்.க்ரூஸ் ஃபெர்ணாண்டஸ் சிலை சிக்னலில் இந்த முறையாவது கவனமாய்க் கடந்துவிட வேண்டுமென்று நினைத்து, ஒடிச்சென்று வழக்கம் போல் இடித்து நின்றேன். இம்முறை நான் இடித்து நின்றது ஒரு குழந்தை மேல்.எட்டு வயதிருக்கும்.
தடுமாறியவளைத் தாங்கிப்பிடித்து மன்னிப்பு கேட்டேன்.சிரித்தவாறே, “பரவால்லக்கா” என்றாள்.புன்னகையோடு நான் அவளை ஆராய்ந்தேன்.குட்டி கண்கள்,இருக்கா இல்லையா என்ற மூக்கு,சிறு உதடுகள்… அதில் தவழ்ந்துகொண்டே இருக்கும் புன்னகை.. கருப்பு நிறம்..மஞ்சள் பூக்கள் இறைத்த பாவாடை சட்டையுடன் ஒரே புன்னகையில் ஒரு குட்டி தேவதையைப் போல் இருந்தாள்.
அப்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வயர் கூடையுடன் தனியாக நிற்கிறாள் என்று.
“இங்க ஏன் தனியா நிக்கற” – கேள்விக்கனைகளைத் தொடுக்க ஆரம்பித்தேன்.
“பூ விக்கறேன்க்கா” – சிரித்துக்கொண்டே வயர் கூடையைப் பிரித்துக்காட்டினாள். உள்ளே ஒரே ஒரு முழம் பூ மட்டும் இருந்தது. சங்கீதா உணவகம், வேலவன் ஜவுளி,செருப்பு,நகை கடைகள்,புத்தக கடைகள் மிகுந்த சிக்னலில் அவள் நிற்பதின் காரணம் புரிந்தது.
“படிக்கறயா?”
“படிக்கறேன்க்கா”
“இங்க நிக்கற? எப்போ படிப்ப?”
“பள்ளிக்கூடம் விட்டதும் பூ விக்க் வந்துருவேன்க்கா. எட்டு மணிக்கு வீட்டுக்கு போய்டுவேன்க்கா.அப்புறமா படிப்பேன்.” – சிரித்துக்கொண்டே சொன்னாள். பூ வாங்காம இந்த கேள்வியெல்லாம் உனக்கு எதுக்கு என்றெல்லாம் அந்த பிஞ்சுக்கு கேக்கதெரியாது போல.
“அம்மா,அப்பா என்னமா பண்றாங்க?” – தோழி கேட்டாள்.
“அம்மா பூ கட்டுறா”
“அப்பா?” – என்றேன் நான். அமைதியாய் இருந்தாள்.
“அம்மாவும், நீயும் மட்டும் தானா வீட்ல?” – என்றேன்.
”இல்லக்கா. குட்டி பாப்பா இருக்கா.என்ன மாதிரியே இருப்பா” – சிரிப்பு மீண்டும் ஒட்டிக்கொண்டது.
“அக்கா.. இவ்ளோ கேள்வி கேட்டல்ல. இந்த ஒரு முழம் பூவை நீயே வாங்கிக்கோயேன்” –கெஞ்சினாள்.
“ நான் பூ வைக்க மாட்டேம்மா”
“ ஏன்கா? பூ பிடிக்காதா?”
சிரித்துவிட்டேன். தோழி வாங்கிகொண்டாள். கடைசி ஒரு முழம் தோழியின் தலையில் ஏறியது.
“உன்ன இதுக்கு முன்னாடி இங்க பாத்ததில்லயே” – நாங்கள்.
”முன்னாடி பழைய பஸ் ஸ்டாண்டு பக்கம் நிப்பேன்கா. உன்ன கூடத்தான் நான் பாத்ததில்ல. நானும் உன்ன இப்போ தான பாக்கறேன். அது மாதிரி தான்”- அழகாய் நீட்டி முழக்கினாள்.
தோழியும் நானும் சிரித்துவிட்டோம். அவள் தலையைக் கோதி ”நன்றாக படிமா” என்று சொல்லிவிட்டு நடந்தோம்.
நான்கெட்டில், “அக்கா” என்றாள். திரும்பினோம்.
“உங்க பேர் என்ன?”
அப்பொழுது தான் அவளது பேர் கேட்காதது நினைவு வந்தது. எங்கள் பேர்கள் சொல்லிவிட்டு அவளது பேர் கேட்டோம்.
“சித்தாரா” – சிரிப்புடன் சொன்னாள்.
“உன்ன மாதிரியே உன் பேரும் நல்லா இருக்கு” – என்றேன்.
“ரொம்ப தேங்க்ஸ்கா. அம்மாட்ட உங்கள பத்தி சொல்றேன்” – சிரிப்புடன் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
மூளையின் ஒவ்வொரு செல்லிலும் அவளது புன்னகை படிந்து இருந்தது.
=========================================================================
இரண்டு மணி நேரம் ஆகியிருந்தும் கோபம் இன்னும் மிச்சமிருந்தது. அன்று, தூத்துக்குடியின் வெப்பத்தோடு என் கோபத்தில் இன்னும் வெப்பமாயிருந்தது விடுதியறை.வெடித்துக் கொண்டிருந்தேன்.
“அவன் எப்படி அப்படி பேசலாம்? ஆண்கள் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே ஒழுக்கமானவர்களாம். பெண்கள் தான் கெட்டுபோகிறார்களாம். கலாசாரத்தை சீரழிக்கறாங்களாம்.அவனுக்கு பெண்கள் மேல அக்கறையாம்.அதனால தான் கவலைல கவிதைல தன்னோட ஆதங்கத்தைக்கொட்டி பெண்களுக்கு அறிவுரை சொல்லி கவிதை எழுதறானாம்”
சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் தோழி.
“ நீ எதுக்கு இப்போ இப்படி கத்தற? எவனோ எதையோ எழுதிட்டு போறான். உனக்கென்ன வந்துச்சு?”
“எனக்கென்னவா? பாத்துட்டு சும்மா வர சொல்றியா? இப்போ இவன் கிட்ட யாரு அறிவுரை கேட்டா?? இல்ல, அறிவுரை சொல்ற மாதிரி இவன் என்ன பண்ணான்? கிறுக்க தெரிஞ்சா என்ன வேணாலும் கிறுக்கறதா?”
“எல்லாரயுமா சொல்றான்? பார்ட்டி,ட்ஸ்கோனு போறவங்கள தானே திட்டறான். அவங்களால தானே கலாச்சாரம் கெட்டு போகுதுனு சொல்றான்”
“சரி.ஆனால் அங்க பார்ட்டில ஆண்கள் கலந்துக்கறதில்லயா? இல்ல, ஆண்கள் பார்ட்டியில் கலந்து கொள்வது சரியென்று இந்த சமூகம் ஒத்துக்கொண்டதா? தவறில் இருவருக்கும் தானே பங்கு? பொண்ணுங்க மட்டும் தான் தப்பு பண்றாங்க என்பது தான் அவன் கவிதையின் சாரம். எப்போ பாரு அவ இப்படி இருக்கா..இவ இப்படி பண்றா.. பெண்களே எப்பொழுது திருந்துவீர்கள்? இப்படித்தான் இருக்கு. ஆண்கள் எப்பவுமே ஒழுக்கமானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதைத்தான் ஒத்துக்கமுடில. சொந்த வாழ்க்கைல சறுக்கிட்டு பெண்களுக்கு அறிவுரை சொல்றது,குடி,அடின்னு இருக்கற ஆண்கள்,உன்னை அடக்கும் ஆணை நீ எதிர்த்து துணிந்து நில் அப்படினு சொல்லிட்டு வீட்ல அடக்கறது,இரண்டு மூணுன்னு வரிசையா பொண்டாட்டி வச்சுக்கிட்டு கலாச்சாரம் பேசறது..எத்த்னை பேர் இப்படி இருக்கிறார்கள்..ஆனால் அவர்கள் ஒழுக்கமானவர்கள்.. ஏனென்றால் அவர்கள் ஆண்கள்.சமூகத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் தவறு செய்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளவே இல்லை. அவன் கூட வேலை செய்யறவங்க அப்படி பார்ட்டினு ஊர் சுத்தறாங்களாம். அக்கறை இருக்கர இவன் நேரடியாய் அந்த பொண்ணுக்கு அறிவுரை சொல்ல வேண்டியது தான?? அத விட்டுட்டு பின்னாடி தப்பா பேசிட்டு கவிதை எழுதி அடுத்த பொண்ணுங்களுக்கு அறிவிரை சொல்ல வந்துட்டான்” – விடாமல் கத்திக்கொண்டிருந்தேன்.
“இன்னொரு விஷயம் கேளு. பையனுக்கு எதுக்கு கோபம்னு நெனக்கற?? படிச்சு முடிச்சதும் இண்டெர்வியூல இவனோட திறமைக்கு மதிப்பு இல்லயாம். பெண்களோட சிரிப்புக்கும்,ட்ரெஸ்க்கும் தான் மதிப்பாம். அவன்கிட்ட யார் ஆட்கள் தேர்வு செய்தது? ஆண்கள் தானே? அவர்கள் ஏன் அழகுக்கும் சிரிப்புக்கும் மதிப்பு கொடுக்கணும்?திறமைக்கு மதிப்பு கொடுக்காத அவர்கள் தவறு செய்யவில்லையா? என்ற கேள்விக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?? ஆண்கள் அப்படித்தானாம்.பெண்கள் உபயோகித்துகொள்கிறார்களாம். அப்புறம் எதுக்கு இப்படி பொலம்பறானு தெரில..ஆண் எப்படினாலும் இருப்பானாம்.பொண்ணுங்கதான் ஒழுக்கமா இருக்கனுமாம். ஒழுக்கம் என்பது மனுச ஜென்மத்துக்குனு அவனுக்கு தெரியல..எல்..”
எழுந்து வந்து வாயைப்பொத்தினாள் தோழி.
“ நீ நிறுத்தமாட்ட.கிளம்பு. R.V tailors போகலாம். சுடிதார வாங்கிட்டு வருவோம்” என்றாள் கடுப்புடன்.
புலம்பிக்கொண்டே முகம் கழுவ சென்றேன்.
“புலம்பாம போ” என்றாள் தோழி.
முறைத்துவிட்டு நடந்தேன்.

தூத்துக்குடியின் இன்னுமொரு இரவு.இன்னும் அழகாக இருந்தது.
“தயவுசெஞ்சு பஸ்ல,ரோட்ல புலம்பாம வா” என்றாள் தோழி. அமைதியாகவே R.V.Tailros வந்து சேர்ந்தோம்.
சுடிதாருக்கு காசு கொடுத்துவிட்டு கிளம்பும்போது,அந்த டெய்லர் அக்கா, “உங்க ஆபிஸ்ல டிப்ளமோ படிச்சவங்கள சேத்துப்பாங்களா?” என்றார்.
“எடுப்பாங்க. ஏன்கா?”
“தம்பிக்கு ஒரு வேலை வேணும்.சும்மா தான் இருக்கான். எங்கம்மா நம்ம கஷ்டம்லாம் அவனுக்கு புரியுது..ஒண்ணு பேசமுடிய மாட்டேங்குது.வேலை இருந்தா சொல்லுங்கம்மா” – மெலிதாய் சிரித்தவாறே சொன்னார்.
“சரிக்கா..விசாரிக்கறோம்.”- சொல்லிவிட்டு நடக்கையில், “அக்கா,உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?” –என்றேன்.
முழித்த டெய்லர் அக்கா,”அதுலாம் எனக்கு எதுக்கு?? ஏன் கேட்கறிங்க?”
”ஒண்ணும் இல்லக்கா”- என்று சொல்லிவிட்டு என்னை இழுத்து வந்தாள் தோழி.
ிரும்ப வருகையில் க்ரூஸ் ஃபெர்ணாண்டஸ் சிலை அருகே சித்தாரா நின்று கொண்டிருந்தாள் அதிக சிரிப்புடன். இன்று நிஜமாகவே ஒரு தேவதையைப்போல் ஜொலித்தாள்.
“ஹை.. தேவதை..”
பளீரென்று சிரித்தாள்.
”எப்படி இருக்க சித்தாரா?”
“ நல்லா இருக்கேன்கா. நீங்க எப்படி இருக்கிங்க?”
“ நாங்க நல்லா இருக்கோம். என்ன புது சட்டையெல்லாம் போட்டுருக்க?”
“அப்பா வந்துருக்காரு. அவர் தான் புது சட்டை வாங்கிக் கொடுத்துருக்கார். எனக்கும் பாப்பாக்கும் அம்மாக்கும்”
“ஓ.. இவ்ளோ நாள் எங்கயாச்சும் வெளியூர்ல இருந்தாரா? இன்னைக்கு தான் வந்தாரா?”
அமைதியாய் சொன்னாள். ” சித்தி வீட்ல தான் இருப்பார். எப்போவாச்சும் தான் எங்க வீட்டுக்கு வருவார்” – கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.
“ நல்லா படிக்கறயா?”
“படிக்கறேன்கா”
சட்டென்று கேட்டென். ”கவிதைலாம் படிப்பியா?”
“அப்படினா என்னக்கா?”
கன்னத்தை தட்டிவிட்டு நடந்தோம்.
தோழி அர்ச்சனையை ஆரம்பித்தாள். “ஏன் இப்படி இருக்க? எவனோ முகம் தெரியாதவன். நீ ஏன் இவ்ளோ ஆதங்கபடற?”
“மனித மனங்கள் எவ்ளோ பாரபட்சமா இருக்கு பாரு. பொண்ணுங்க தவறு செய்யவே இல்லனு சொல்லல. ஆனால் பொண்ணுங்க மட்டும் தான் தப்பு செய்யறாங்கனு சொல்றத தான் ஏத்துக்க முடில. நானே அடிக்கடி சொல்லிருக்கேன்.. பொண்ணுங்க சுயநலவாதியா இருக்காங்க..பசங்க கிட்ட இருக்கற கண்டுக்காத இயல்பு, காசு பாக்காம செலவு செய்யறது, கணக்கு பாக்காம உதவி செய்யறதுனு ஆண்களுக்கு நெறய நேரம் சப்போர்ட் பண்ணி பேசிருக்கேன்.ஆனா இதெல்லாம் பாக்கும் போது ஏன் இப்படி ஒருதலை பட்சமா யோசிக்கறாங்கனு கோபம் வருது. அதுவும் ஆண்கள் ஆரம்பத்துல இருந்தே ஒழுக்கமானவங்கனு சொல்றத கேக்கும் போது அழறதா சிரிக்கறதானு தெரில…”
“விடு.. தெரியாம எழுதிட்டான். எவன் எழுதினானோ இன்னைக்கு நான் மாட்டிட்டு முழிக்கறேன்.. விடேன்..?” – பாவமாய் சிரித்தாள்.
சிரித்துவிட்டு, “உன்ன பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு.. உனக்காக விடறேன்..”
பஸ் ஸ்டாண்டை நெருங்கினோம். அங்கே ஓர் ஓரமாய் சாமி படங்களை தரையில் விரித்து விற்றுக்கொண்டிருந்தாள் ஒரு பாட்டி.
“அந்த பாட்டி கிட்ட போய் கவிதை எழுத தெரியுமானு கேட்டுட்டு வரவா? அவள் பின்னாலும் கண்டிப்பாய் ஒரு ஆண்மகன் இருப்பான்..”
“அடி வாங்குவ..” – இழுத்துச் சென்றாள் தோழி.
“பாவம்.. பாட்டி இங்க உக்காந்து விக்கறதுக்கு காரணம் அவ கணவனோ மகனோ..”
“தாயே வாய மூடறியா?? முடியல..”
“சரி சரி.. நான் வாய திறக்கல” – சொல்லிவிட்டு மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தேன்.

வேலை வேலை வேலை.தூங்ககூட நேரம் கிடைக்காத அளவுக்கு வேலை. கவிதை, கதைகள், விவாதங்கள் மறந்து, நாள் பொழுது மறந்து, எப்பொழுதும் கணினியும் டெஸ்டிங்குமே நினைவில் இருந்தது.தீவாளி நெருங்கியது. புது சட்டை எடுக்க கூட நேரம் இல்லை.ஒரு மாதமாய் வெளியில் போக முடியவில்லை.இன்று தான் நேரம் கிடைத்தது. வழக்கம் போல் தோழியும் நானும் கிளம்பினோம்.
கிளம்பிய போது தோழி, “சித்தாராவுக்கும் எடுப்போமா” என்றாள். சட்டென்று சித்தாரா கண்முன் வந்தாள்.
“கண்டிப்பா. அந்த தேவதைக்கும் தேவதையின் தங்கைக்கும் எடுப்போம்”
“சரி” என்றாள் தோழி.
கூட்ட நெரிசலில் எல்லாருக்கும் எடுத்துக்கொண்டு க்ரூஸ் ஃபெர்ணாண்டஸ் சிலை வந்து சேர்ந்தோம். சித்தாரா நின்று கொண்டிருந்தாள். மெல்லிய புன்னகை. ஆனால் சோகம் தேங்கியிருந்தது.
“தேவதை எப்படி இருக்கா?”
அவ்வளவு தான்..அழ ஆரம்பிதாள்.
“என்னாச்சு சித்தாரா? ஏன் அழற? வீட்ல யாருக்காவது உடம்பு சரி இல்லயா?”
“அம்மா சாமிட்ட போய்ட்டாக்கா”
அதிர்ந்து நின்றோம்.பேச்சு வரவில்லை.
மெதுவாய் தோழி கேட்டாள். “எப்படி இறந்தாங்க”
“பஸ் மோதிடுச்சுக்கா”
அமைதியாய் நின்றோம். என்னவென்று ஆறுதல் சொல்ல?
“எப்போ”
“போன வாரம்க்கா”
இதயம் விம்மியது. அதுக்குள்ளவா பூ விக்க அனுப்பி விட்டார்கள்??
“அழாத சித்தாரா. இப்போ எங்க இருக்க?”
“சித்தி வீட்ல”
“ஸ்கூலுக்கு போறியா?”
“இல்லக்கா” – இன்னும் அழுதாள்.
“தங்கை எங்க இருக்கா?”
“சித்தி வீட்ல தான் இருக்கா”
“சித்திக்கு குழந்தைங்க இருக்காங்களா?”
“இல்லக்கா”
ஏனோ ஆறுதலாய் இருந்தது.
“படிக்கணும்க்கா” –அழுதபடி வார்த்தை வெளிவந்தது.
“இந்த அக்காக்கள் மாதிரி நெறய அண்ணாக்கள் எங்க கூட வேல பாக்கறாங்க. அவங்ககிட்ட சொல்லி சித்திகிட்ட பேச சொல்றோம். உன்ன எல்லாரும் சேந்து படிக்க வைப்பாங்க.உன் வீடு எங்க இருக்கு?”
அழுதுகொண்டே சொன்னாள். குறித்துக்கொண்டோம்.
“தேவதைகள் அழமாட்டார்கள் சித்தாரா. நீ உன் தங்கையையும் தங்கை மாதிரி இருக்கற எல்லாரையும் பாத்துக்க வந்துருக்கிற தேவதை. அழக்கூடாது. சரியா?”
கண்ணீர் வழிய தலையாட்டினாள்.
வாங்கி வந்த சட்டையை நீட்டினோம்.
“வேணாம்க்கா.சித்தி திட்டும்”
“சரி.. நாங்க உன் வீட்டுக்கு வரும்போது கொண்டுவரோம். அழக்கூடாது. சித்தாரா சிரிச்சாதான் தேவதை”
மெதுவாய் புன்னகைத்தாள்.
“அக்கா.. பூ வாங்கிகோக்கா” – தோழியைப் பார்த்துக் கேட்டாள்.
தோழி வாங்கினாள்.
“எனக்கு பூ இருக்கா?”
“ஒரே ஒரு முழம் இருக்குக்கா”
“கொடு”
கொடுத்தாள். கடைசி முழ பூவை சித்தாராவுன் தலையில் வைத்தேன்.
“வீட்டுக்கு போகும் வரை வச்சுக்கோ”
தோழி சிரித்தபடி சேர்த்து காசு கொடுத்தாள்.
சித்தாராவிடம் விடை பெற்று கிளம்பினோம். நானும் பேசவில்லை. தோழியும் பேசவில்லை.
நம்பிக்கையும் வாழ்வும் கற்றுத்தந்த நண்பர்கள் இருக்க யாரோ ஒருவனுக்காய் கோபப்பட்டது தவறு என்று புரிந்தது. அவன் எதைப்பற்றியும் கவிதை எழுதட்டும். நல்ல நண்பர்களுக்காகவும் அவர்களின் புனித செயல்களுக்காகவும் நான் கவிதையும், கட்டுரையும் எழுதிக்கொண்டிருப்பேன்.
எதை நான் விட்டுசெல்ல வேண்டும் என்பதில் தெளிவானேன். தோழி நிம்மதியாய் நடந்துகொண்டிருந்தாள்.

Nov 1, 2009
தேன்கூடு
இந்த வாரம் மற்றுமொரு இணையதளத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன். இது தமிழில் இயங்கும் தளம் (புதுவை.காம்). கணிப்பொறி சம்பந்தமான பதிவுகள் நிறைய இடம் பெறுகின்றன.
விண்டோஸ் மற்றும் லினக்ஸ்-ல் நமக்கு தெரியாத சின்ன சின்ன விஷயங்களை அழகாக விளக்குகிறார்கள்..... நீங்களும் ஒரு முறை விசிட் செய்து பாருங்கள். கூகுள் ரீடரிலும் போட்டு வச்சுக்கோங்க ரொம்ப யூஸ்புள்ளா இருக்கும்
தமிழில் குரான், பைபிள் மற்றும் கீதை !!!
குரான் வேண்டுமா? மென்புத்தகமாக இந்த தளத்தில் இருந்து pdf வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள் ! மேலும் யூ-ட்யூப் தளத்தில் அதன் ஒரு பகுதியானது ஒலி-ஒளி வடிவில் கிடைக்கப் பெறுகிறது. பின்குரல் வளம் மிக அருமை, நீங்களும் கேட்டுப் பாருங்கள் !
பைபிளை ஆன்லைனில் தமிழில் படிக்க
கீதையை தமிழில் படிக்க மற்றும் தரவிறக்கம் செய்ய. என்னை பொறுத்தவரை கீதையின் சரியான் விளக்கம் ஓரளவுக்கு Bagavad Gita As It Is-ல் இருகின்றது.
லேப்டாப் யூஸ் பண்றவங்களுக்கு ஒரு சின்ன குறிப்பு
நீங்க உங்க லேப்டாப்பை UPS இருக்கும் இடத்தில் யூஸ் பண்ணும் போது, பேட்டரியை கழட்டி விட்டு நேரடியா AC suppy-யில் இணைத்து பயன் படுத்தவும். இதனால் உங்கள் பேட்டரி லைஃப் 2/3 வருடங்கள் வரை நன்றாக இருக்கும். நானும் இப்ப இப்படி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். வீட்டில் UPS supply இல்லையென்றால் சின்னதாக ஒரு UPS (approx Rs.2000) வாங்கி வைத்துக் கொள்ளவும். பேட்டரி மற்றும் அடாப்டர் தனித்தனியே ரூ.5000 முதல் ரூ.6000 வரை ஆகின்றது.
போன வாரம் காயகல்ப் பயிற்சிக்கு போயிருந்தேன். பயிற்சியின் முடிவில், எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்தார்கள். எனக்கோ காலையில எதுவும் சாப்பிடலங்கறதுனால நல்லா பசி.
நானும் பிஸ்கட்டை வாங்கி நல்லா நறுக்கு நறுக்குன்னு தின்னுட்டேன், ஆனா மத்த பயபுள்ளைக எவனும் சாப்பிடாமா மாஸ்டர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தாங்க. திடீர்ன்னு மாஸ்டர்
பிஸ்கட்டை தூக்கி சாப்பிடும் போது செய்ய வேண்டிய பயிற்சியை செய்ய என் கையில் மட்டும் பிஸ்கட் மிஸ்ஸிங். நீயும் தான் இருக்கியேங்கற மாதிரி மாஸ்டர் என்னைய பார்த்து ஒரு லுக்கு விட, ஆள் எஸ்கேப்.............
வாழ்க வளமுடன் !

Oct 25, 2009
தேன்கூடு
ஆபிஸ்ல புடுங்கற ஆணிய பார்த்தா ஃப்யூச்சர்ல புடுங்க தலையில முடி ஒண்ணியும் இருக்காதுன்னு நினைக்கறேன்... அவ்வளோ ஆணி.....
இருந்தாலும் இதுக்கு நடுவுல நான் பார்த்தது, கேட்டது மற்றும் படிச்சதை பத்தி சொல்ல போறேன். ரொம்ப முக்கியமாக்கும் அப்படின்னு எல்லாம் கேக்கபிடாது (முக்கியமா மக்கய்யா :) ).
அமெரிக்காவின், வியட்னாம் மீதான போரை உலக பார்வைக்கு கொண்டுவந்த ஒரு புகைப்படத்தை (பான் - தி - கிம் - ஃபூக்) நெட்டில் பார்க்க கிடைத்தது. பிறகு கூகுள் ஆண்டவனின் துணையுடன் வலை விரித்ததில், விக்கி அண்ணாச்சி உதவியுடன் அதன் பற்றிய செய்திகளை காண முடிந்தது. நீங்களும் படித்து பாருங்கள். இந்த மாதிரியான அவலங்கள் எல்லா போர் முனைகளிலும் இருக்கின்றன. இந்த புகைப்படம் எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் யூ-டியூப் இணையதளத்தில் காண கிடைக்கிறது. எல்லோரும் மனிதர்கள், நம் உறவுகள் என்ற எண்ணம் என்று தான் (???) மலருமோ, முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு......
குறிப்பு: மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் வீடியோவை பார்க்கவும்.
குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா.......!!!!
இதுக்கு மேல சொல்ல ஒண்ணியும் இல்லை நீங்களே கேளுங்க ! வேணும்னா விக்கி சொல்லவரதை கேளுங்க !!!
நானும் ரெளடிதான்......... !!!!!!!!
"Imagine an electronic page for each species of organism on Earth..." - Edward O. Wilson
இந்த வார்தையை மெய்யாக்க இதோ ஒரு இணையதளம். நாம ஆளாளுக்கு ஒரு வலைப்பூ, இணையபக்கம், ஆர்குட், ஃபேஸ்புக் என போக, மற்ற ஜீவராசிகள் என்ன செய்ய, அவைகளும் களத்தில் குதித்து விட்டன
தளத்தை எப்படி பயன்படுத்த (?) என்பதற்கான வீடியோ இதோ இங்கே !
டிஸ்கி:
முக்கியமாக இதில் குறிப்பிட்டுள்ள விக்கி, நம்ம விக்னேஷ் கிடையாது :)
ஓ.கே எனக்கு பசிக்குது சாப்பிட போறேன்.... வர்ட்டா................
Oct 24, 2009
Oct 20, 2009
TRI-CYCLE Donation
Hi Friends,
Date : July05,2009
we have donated a tri-cycle for a physically challenged person who had lost his two legs due to polio attack.. I have attached some snap shots in this blog..
Oct 17, 2009
Tuty Engg's - Welcome message
This is the official blog of Tuty Engg's (in short TE), where you can find all our TE's and TET (Tuty Engg's Trust) activities.
TE is welcoming volunteers to moderate this blog, interested people contact me.
Subscribe to:
Posts (Atom)