இந்தப் பதிவை வாசிக்கும் எம் இனிய தோழரே! தோழியே! தங்கள் வருகைக்கு நன்றி! மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்களேன்!

Apr 21, 2010

போர்க்களச் சூழல்...




நம்பிக்கை நூலொன்றில்
அறுபட்டுத் தொங்கும் மனங்கள்
அதன் பிம்பங்களைக்
கிழித்துக் கூறு வைக்கின்றன..

மனங்களின் சுவர்களை
அரித்துப் புண்ணாக்குகின்றன
வழியெங்கும் சிதறியிருந்த
வார்த்தைக் கிருமிகள்..

சொட்டும் வலியின் தாக்கம்
தவிர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது..

மீறிப் புன்னகைக்கும்
மனங்களையும்
காய வைக்கின்றன,
போர்க்களச் சூழலின்
வெப்பக் கற்றைகள்..

ஒவ்வொரு நிராகரிப்பிலும்
வேகமாய் உயர்கின்றன
வலியின் படிமங்கள்..
அதில்
உறைந்து காணாமல் போயிருந்தது
புரிதலின் முதலெழுத்து..

Jan 11, 2010

Hope Mission Home Visit

Hi Friends,

 I have shared Hope Mission Home Photo's