ஆபிஸ்ல புடுங்கற ஆணிய பார்த்தா ஃப்யூச்சர்ல புடுங்க தலையில முடி ஒண்ணியும் இருக்காதுன்னு நினைக்கறேன்... அவ்வளோ ஆணி.....
இருந்தாலும் இதுக்கு நடுவுல நான் பார்த்தது, கேட்டது மற்றும் படிச்சதை பத்தி சொல்ல போறேன். ரொம்ப முக்கியமாக்கும் அப்படின்னு எல்லாம் கேக்கபிடாது (முக்கியமா மக்கய்யா :) ).
அமெரிக்காவின், வியட்னாம் மீதான போரை உலக பார்வைக்கு கொண்டுவந்த ஒரு புகைப்படத்தை (பான் - தி - கிம் - ஃபூக்) நெட்டில் பார்க்க கிடைத்தது. பிறகு கூகுள் ஆண்டவனின் துணையுடன் வலை விரித்ததில், விக்கி அண்ணாச்சி உதவியுடன் அதன் பற்றிய செய்திகளை காண முடிந்தது. நீங்களும் படித்து பாருங்கள். இந்த மாதிரியான அவலங்கள் எல்லா போர் முனைகளிலும் இருக்கின்றன. இந்த புகைப்படம் எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் யூ-டியூப் இணையதளத்தில் காண கிடைக்கிறது. எல்லோரும் மனிதர்கள், நம் உறவுகள் என்ற எண்ணம் என்று தான் (???) மலருமோ, முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு......
குறிப்பு: மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் வீடியோவை பார்க்கவும்.
குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா.......!!!!
இதுக்கு மேல சொல்ல ஒண்ணியும் இல்லை நீங்களே கேளுங்க ! வேணும்னா விக்கி சொல்லவரதை கேளுங்க !!!
நானும் ரெளடிதான்......... !!!!!!!!
"Imagine an electronic page for each species of organism on Earth..." - Edward O. Wilson
இந்த வார்தையை மெய்யாக்க இதோ ஒரு இணையதளம். நாம ஆளாளுக்கு ஒரு வலைப்பூ, இணையபக்கம், ஆர்குட், ஃபேஸ்புக் என போக, மற்ற ஜீவராசிகள் என்ன செய்ய, அவைகளும் களத்தில் குதித்து விட்டன
தளத்தை எப்படி பயன்படுத்த (?) என்பதற்கான வீடியோ இதோ இங்கே !
டிஸ்கி:
முக்கியமாக இதில் குறிப்பிட்டுள்ள விக்கி, நம்ம விக்னேஷ் கிடையாது :)
ஓ.கே எனக்கு பசிக்குது சாப்பிட போறேன்.... வர்ட்டா................